Saturday 26 March 2016

விசுAwesome - பதிவுகளைக் கடந்த பாசம்

கலாய்க்கப் போவது யாருன்னு உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டியை பதிவர் விசுAwesome 03.03.2016 அன்று தனது blog-ல்அறிவித்து தமிழ் வலைப்பதிவர் உலகில் பெரும் பரபரப்பை(!) ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே..!!

துளசிதரன் அவர்கள், முத்துநிலவன் அவர்கள், மதுரை தமிழன், பகவான்ஜி, ஸ்ரீராம், மூங்கில்காற்று மற்றும் பலரும் நகைச்சுவையுடனும் நய்யாண்டியுடனும் தங்கள் கமெண்ட்டுகளை அளித்தனர்.  ஆகோபித்த ஏகோபித்த ஒரு மனதாக அடியேன் போட்ட கமெண்ட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரசுரித்தார்.  கார்ட்டூனும் கமெண்ட்டும் கீழே பார்வைக்கு...
 
முடிவுகளை வெளியிட்ட லிங்க் http://vishcornelius.blogspot.com/2016/03/blog-post_9.html      

பின்பு என்னைத் தொடர்பு கொண்டு எனக்குப் பிடித்த ஹோட்டலில், தான் அறிவித்த பரிசுக்குண்டான couponகளை வாங்கி எனக்கு விரைவில் கிடைக்கப் பெறச் செய்தார்.

மீன், இறால், கோழி, மட்டன், காளான், பன்னீர், அன்னாசி, உருளை, மற்றும்பல என grilled starterகள் அணிவகுக்க வேட்டை தொடங்கியது Barbeque Nation-ல்...

ராசாத்திகள் இருவரும் எதையும் ஒதுக்காமல் அனைத்திலும் படையெடுத்தனர்.  தொடாத இரண்டே dishகள் சோறும் பருப்பும்..!! பின்னே அதை சாப்பிடவா ஹோட்டலுக்கு போகணும்?  இதுல, நான் வாங்கின Bloody Mary-யை சுவைச்சுப் பாக்கணும்னு சின்னவ பயங்கர அடம்..!!

பரிசளித்துப் பாராட்டி குடும்பத்துடன் ஓர் இரவு உணவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்த விசுவிற்கும், வாழ்த்திய அனைத்து சக பதிவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்த்தது மீரா செல்வகுமாரின், "டேய் ...அத விடுங்கடா.. அது செத்தவங்களை உட்கார வைக்கிறதுக்கு வச்சுருக்கோம் ..."
மற்றும் பழநிவேலுவின், "அம்மாவின் ஆணை வரும் வரை நான் இப்படி பிடித்துக் கொண்டு தான் நிற்பேன். அதில் உட்கார மாட்டேன்" என்ற இரண்டு கமெண்ட்டுகளும் தான்.

விசுவின் சார்பாக பரிசுக் கூப்பன்களை பெற்று, என்னைத் தொடர்பு கொண்டு நேரில் வந்து அளித்தவர் http://thillaiakathuchronicles.blogspot.com பதிவர்களில் ஒருவரான கீதா..!!  நன்றி கீதா!! தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

மாதமொருமுறை இதைப் போன்ற போட்டிகளை நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குடும்பத்துடனான ஒரு மகிழ்வான தருணத்தை ஏற்படுத்தித் தரப் போவதாக விசு சொல்லியிருக்கிறார்.  பாராட்டுக்கள் விசு, you are really awesome!!

அன்புடன்
மலர்வண்ணன்


Saturday 19 March 2016

எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். 

ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால்
முதல்வருடம் 100+10 = 110
இரண்டாம் வருடம்110+11 (10% of 110) = 121
மூன்றாம் வருடம் 121+12.1 = 133.1

இது தான் காம்பவுண்டிங். வட்டியும், வட்டிக்கான வட்டியும், அதற்கான வட்டியும் தொடர்ச்சியாக உங்கள் முதலீட்டினை மேலேற்றும். இதனால் தான் நெடுநாளைய திட்டங்களில் பணவரவு அதிகம்.
மத்திய தர வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை ஏப்ரலிலிருந்து 8.7%லிருந்து தடாலடியாக 8.1% ஆக குறைத்திருக்கிறது. அதாவது ஒரே ஷாட்டில் 0.6% காலி. பார்வைக்கு இது வெறும் 0.6% ஆனால் இதன் நீண்டகால பாதிப்பு அதிகம்.

மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.
10% என்பதற்கு பதிலாக 0.6% குறைத்து 9.4% என்று வைத்துக் கொள்வோம்.
முதல் வருடம் 100+9.4 = 109.4
இரண்டாம் வருடம் 109.4+10.28 = 119.68
மூன்றாம் வருடம் 119.68+11.24 = 130.92

133.10 வர வேண்டிய இடத்தில் 130.92 மூன்று வருடங்கள் கழித்து வரும். உங்களுடைய வாழ்நாள் சேமிப்பில் அரசாங்கம் கிட்டத்திட்ட 2.18 விழுங்கிவிட்டது. அதாவது உங்களுடைய ஆரம்பநிலை முதலீட்டில் கிட்டத்திட்ட இரண்டே கால் விழுக்காடு ஸ்வாஹா இதை 20 - 30 வருடங்களுக்கு கணக்கு போட்டால் நீங்கள் சேமிக்கும் தொகையை முன்வைத்து சில பத்து இலட்சங்களிலிருந்து பல கோடிகள் வரை காணாமல் போகும்.

இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6%; பாதுகாப்பான முதலீட்டின் வட்டி விகிதம் 8.1% ஆக பணவீக்கம் சாப்பிட்டது போக மிச்சமிருப்பது 2.1%. ஒரு வேளை உங்கள் முதலீடு 5 கோடிகள் இருந்தால் இந்த வித்தியாசம் வருடத்திற்கு ரூ. 10,50,000. மாதத்துக்கு ரூ. 87,500 இதை வைத்துக் கொண்டு அடுத்த 15 வருடங்கள் சென்னை மாதிரியான ஒரு பெருநகரத்தில் வாழலாம். ஆனால் எல்லோராலும் 5 கோடி முதலீடோ, சேமிப்போ செய்ய முடியாது.

அப்படியென்றால் என்ன செய்வீர்கள் ?
1 ) கடன் வாங்குவீர்கள். கடன் சுழற்சியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்
2 ) அதிக இலாபம் வரும் என்று சொல்லப்படும் திட்டங்களில்முதலீடு செய்வீர்கள்.


இது ஒரு மாஸ்டர் ப்ளான். கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க உறுதியளிக்கும் திட்டங்களின் வட்டி விகிதத்தினைக் குறைப்பது. பணவீக்கம் தடாலடியாக இந்தியாவில் குறையப் போவதில்லை. இந்த அரசு உறுதி திட்டங்கள் குறைவான ரிட்டர்ன் வழங்கும் போது, ஈக்விட்டி, ஸ்டாக் மார்க்கெட் என ஒரு போலி நிதி ஆலோசக கும்பல் உருவாகும்.

‘எதுக்கு சார் பிக்சட் டெபாசிட்ல போடறிங்க. ரியல் எஸ்டேட்ல போடுங்க. ஸ்டாக் மார்க்கெட்ல போடுங்க. செம்மரம் ஆஸ்திரேலியால என்ன ரேட்டு போகுது தெரியுமா, அதுல இன்வெஸ்ட் பண்ணுங்க. பெரிய கம்பெனி சார் அது. BBB+ ரேட்டிங். அதனோட கடன் பத்திரத்துல போடுங்க” 

மத்திய தரவர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு தெரியாத ரிஸ்க் முதலீடுகளில் காசு போட ஆரம்பிப்பார்கள். Fly by Night operatorsகளுக்கு ஜாக்பாட் அடிக்கும். போட்ட ரிஸ்க் முதலீடு முழுமையாக வராத காரணத்தினால் கடன் வாங்க ஆரம்பிப்பார்கள். 

இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகள், இடைத்தரகர்கள் வட்டியை ஏற்றுவார்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் கடனாளியாகவே இருந்து, கடனாளியாகவே வாழ்ந்து, கடனாளியாகவே சாவீர்கள். ஒரு வேளை வீடு வாசல் நிலம் வாங்கி வைத்திருந்தால் அதையும் reverse mortgage செய்யுங்கள் என்று சொல்லி அதையும் பிடுங்குவார்கள். 

தனியார் முதலாளிகள் கொழிப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி முனையம் என எல்லாமும் கடை விரித்து உங்களின் கோவணத்தை கூட வாங்கிக் கொண்டு காசு கொடுப்பார்கள். சராசரி இந்தியன் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் புழுங்கி புழுங்கி அவமானத்தில் உழன்று நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து எல்லா ‘தற்காலிக சந்தோஷங்களுக்கும்’ (குடி, சீட்டு, சாராயம், போதைப் பொருள்) அடிமையாகி செத்துப் போவான். 

இது தான் உலகமெங்கிலும் நடந்தது. இப்போது இந்தியாவில் நடக்க ஆரம்பிக்கும். இந்தியா வெகு சீக்கிரத்தில் வெளிற ஆரம்பிக்கும். இந்த நாட்டின் எதிர்கால குடிமகன்கள் இந்த அரசாங்கத்தின் புண்ணியத்தில் ‘கடன்காரர்களாக மட்டுமே வாழ்ந்து’ சாவார்கள். 

புண்ணியவான் PPFல் மட்டும் கை வைக்கவில்லை. எங்கெல்லாம் எளிமையான மக்கள் வங்கிகளில் பாதுகாப்பான முதலீடாக வைப்பார்களோ அங்கெல்லாம் கை வைத்து எதிர்காலத்தினை சூன்யமாக்கி இருக்கிறார்கள்.
கிஸான் விகாஸ் பத்திரம் - 8.7% லிருந்து 7.8%
வருட டெபாசிட் (1 வருடம்) 8.4% - 7.1%
வருட டெபாசிட் (2 வருடங்கள்) 8.4% - 7.2%
வருட டெபாசிட் (3 வருடங்கள்) 8.4% - 7.4%
வருட டெபாசிட் (5 வருடங்கள்) 8.5% - 7.9%
தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (5 வருடங்கள்) 8.1%
சீனியர் சிட்டிசன் திட்டம் (5 வருடங்கள்) 9.3% - 8.6%
பெண் குழந்தைகள் திட்டம் 9.2% - 8.6%
Recurring டெபாசிட் (5 வருடங்கள்) 8.4% - 7.4%


18 - 30 வயதுக்குள் என் டைம்லைனில் இருக்கும் நண்பர்களுக்கு (பையன்/ பெண்கள் வைத்திருக்கும் பெரியவர்களுக்கும்) என்னுடைய unsolicited advice.
படியுங்கள். இந்த நாட்டில் இருக்காதீர்கள். வெளியேறுங்கள். இந்த தேசம் உங்களை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கி, கனவுகளை சுட்டெறித்து சாம்பலாக்கி, மயிராக ஊதி விட்டு, உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டு போய்க் கொண்டேயிருக்கும். 

இது மோடி அரசின் சிக்கலாக மட்டும் சொல்லவில்லை. இதை முன்னெடுத்தால் அடுத்து வரும் எந்த அரசாங்கமும் இதை மாற்ற முன்னெடுக்காது. இதில் புவி அரசியல், வல்லரசு கனவுகள், FDI கோஷங்கள் என நிறைய இருக்கிறது. அடுத்த 15 - 20 வருடங்கள் கொடுமையானதாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. 

உங்களின் இளமையை இந்த அதிகாரப்பசிக்கு பலியாக்காதீர்கள். நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து வெளியேறுங்கள். இது உங்களுக்கான நாடல்ல.  இந்த தேசம் எத்தனையோ வெளிநாட்டு படையெடுப்பினையும், ஆக்ரமிப்பையும் பார்த்திருக்கிறது. ஆனால் ‘தேச பக்தர்கள்’ என்கிறப் போர்வையில் இந்த அரசு சுரண்டுவதைப் போல, ஆக்ரமிப்பதைப் போல, அழிப்பதைப் போல ஒரு நாளும் கண்டதில்லை

வயிறெரிந்து சாபமிடுகிறேன் அப்பாவி, எளிமையான, ஒன்றும் தெரியாத மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் உங்களை வரலாறும், இந்த தேசமும் மன்னிக்கவே மன்னிக்காது.

திரு. நரேன் ராஜகோபாலன் அவர்கள் Facebook பதிவு செய்ததை அப்படியே copy and  paste செய்திருக்கிறேன்.... அவருக்கு எமது நன்றிகள்.


Thursday 17 March 2016

வீரம்டா, மானம்டா, சாதிடா...!!!

சேலத்தில் இருந்த மத்திய 90களின் காலம்... ஆதிதிராவிட நண்பனொருவன் காட்டை வித்து கள்ளு குடிச்ச சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை லவ்விக் கொண்டிருந்தான்.  அவள் கல்லூரி இரண்டாமாண்டிலும் இவன் டிகிரி முடித்து ஒரு சுமாரான வேலையிலும் இருந்தார்கள்.

வழக்கம் போல குடும்ப சர்வீசில் கை தேர்ந்த ஒரு பிரகஸ்பதி பொண்ணோட அப்பனுக்கு போட்டுக் கொடுத்து விட  பெரிய வில்லங்கமாகி பேய்மாமன், நாய்மாமன், நரிமாமன் சகிதம் பஞ்சாயத்து கூடி விட்டது.  "வீரம், மானம்,  சாதி, நாற பரம்பரை, நோண்ட பரம்பரை, நொங்கு பரம்பரை, வீச்சு, சங்கு..."ன்னு காதுல கொயியியியியிய்ன்னு சத்தம்.  பல மீசைகள் மீண்டும் மீண்டும் முறுக்கப் பட்டு தீபாவளி சங்குசக்கரம் போல் ஆகிவிட்டிருந்தன.   "பொண்ணை விட்ரு, இல்ல உசிரு இருக்காது..." என பகிரங்கமாக இவனுக்கு மிரட்டல் விடப் பட்டது.

பையன் வீட்டு பெரிசுகளும் நண்பர்களும் சேர்ந்து "காதல், உயிர், இதயம், ரோஜா, மனசு..." என பொங்கிக் கொண்டிருந்தவனின் அப்போதைய பொருளாதாரம், சமூக அந்தஸ்து, குடும்ப சூழல், திருமணத்திற்குப் பின்னான ஓட்டம் மற்றும் போராட்டம், உயிருக்குண்டான உத்திரவாதம் அனைத்தையும் எடுத்துக் கூறி "விட்ருடா..." எனக் கெஞ்ச விட்டு விட்டான்...

பொண்ணோட அப்பனும், பையனும் பஞ்சயத்துப் பெரிசுகள் சொன்னது போல எழுதிக் கொடுத்து விட்டு அண்ணாமலை ரஜினி-ராதாரவி போல் சென்றனர்.  இரு தரப்பைச் சேர்ந்த கரைவேட்டிகள் பலவும் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததையொட்டி ஒன்றாகக் கொண்டாடச் சென்றனர்.

ஓராண்டு கடந்து....

அதே பெண் மீண்டும் ஒரு காதலில் விழுந்தாள்.  இம்முறை விழுந்த இடம் ரொம்ப பெரிசு.  பையன் சேட்டு.  சேட்டு  என்றால் கூடையை தூக்கிட்டு பானி பூரி விற்கும் சேட்டோ, மிலிடரி ஹோட்டல் வாசலில் சிவப்பு துணியை வைத்து துடைத்து துடைத்து பீடா மடிக்கும் சேட்டோ இல்லை.  உயர் மற்றும் நடுத்தர வர்க்க சேலத்து மக்களில் நம்ம சேட்டோட கடைக்கு செல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அம்புட்டு வசதி.  இதுல நம்ம சேட்டு பயனோட சகோதரி மிக உயர்ந்த பதவியில் இருந்த அரசு அதிகாரி.

வழக்கம் போல குடும்ப சர்வீசில் கை தேர்ந்த அந்த பிரகஸ்பதி பொண்ணோட அப்பனுக்கு போட்டுக் கொடுத்து விட மீண்டும் மீசைகள் கூடின.  இம்முறை கூடிய இடம் பையனோட வீடு.  பையனின் சகோதரி நடுவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து, "எப்போ கல்யாணம்?" என ஆரம்பித்தார்.  அதிமுக அமைச்சர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் பம்மிய மல்லுவேட்டிகள் தங்களுக்குள் சில நேரம் முணுமுணுத்துக் கொண்டன.  பின்னர் "ஒன்னுக்கு வருது"ன்னு சொல்லிக் கொண்டே ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர்.

பையனின் சகோதரியே எல்லாவற்றையும் பேசி முடித்தார்.  "பொண்ணுக்கு நீங்க எதுவும் போட வேண்டாம், கல்யாண செலவு எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிறோம், பொண்ணை மட்டும் அழைச்சிட்டு வந்தா போதும்.  பொண்ணை ஒளிச்சி வெச்சு வெளாடுறது, வேற கட்டாயக் கல்யாணம் பண்ணி வெக்கிறதுன்னு ஏதாவது நடந்துச்சினா ஒரு பய நடக்க முடியாது.."ன்னு சுருக்கமா முடிச்சிட்டார்.

"அமைதிப் படை"யில் சத்யராஜ் மணிவண்ணனின் முறுக்கு மீசையைப் பார்த்து, "ஏன்டா மணியா, கள்ளு குடிச்சி போட்டு வாய எப்படி தொடைப்ப?"ன்னு கேட்க,
அதற்கு மணிவண்ணன் தன்னுடைய மீசையை கீழ்ப்பக்கமாக நீவி விட்டு துடைத்துக் காட்டுவார்.
பின் சத்யராஜ், "இனிமே மீசைய இப்படியே வெச்சிருக்கணும், என்ன?" என சொல்ல, அதற்கு 
மண்டையை ஆட்டி விட்டு எழுந்துபோகும் மணிவண்ணனைப் போல நம்ம பெண்ணின் உறவுகள் அனைத்தையும் இறக்கி விட்டு எழுந்து சென்றனர்.

திருமணம் நடந்தது...

சேட்டு வழக்கப் படி சம்பிரதாயம், உடை, உணவு, ஆட்டம் பாட்டம் அனைத்தும்.  பெண் வீட்டார் மண்டபத்தில் வேலை செய்பவர்களைப் போல் ஆங்காங்கே ஓரிருவர் தென்பட்டனர்.  என்னதான் நகை நட்டுகளை அள்ளி போட்டுக் கொட்டு வந்திருந்தாலும் சேட்டு பெண்களின் சிவந்த நிறத்திலும் டிசைனர் புடைவைகளிலும், அவர்கள் பேசிய ஹிந்தியிலும், போட்ட ஆட்டத்திலும் இவர்கள் குறுகிப் போய் பம்மி விட்டனர்.

கை தேர்ந்த அந்த பிரகஸ்பதி எங்கேன்னு பாத்தா ஒரு ஓரமா அங்கிள் சர்விஸ் பண்ணிக் கொண்டிருந்தார்.

வீரம்டா, மானம்டா, சாதிடா...!!!!


Monday 7 March 2016

மஹா ஷிவ் ராத்ரி ஸ்பெஷல்:

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

மேலே ஸ்லோகத்தில் உள்ள "வேஷ்டிதஸோபித லிங்கம்" என்பதில் எந் உள்குத்தும் இல்லை என்பதை உணர்வுப் பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாசிவராத்திரி வழிபாடு
  • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து ஆன்மாவை தூய்மைப் படுத்த வேண்டும். 
  • லிங்கத்தின் உச்சியில் குங்கும போட்டு வைத்தல் நல்ல பலனையும் வழங்கும். 
  • லிங்கத்திற்கு தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். 
  • லிங்கத்திற்கு எண்ணெய் விளக்கேற்றனால் ஞானம் அடையலாம். 
இந்நாள் மட்டுமல்ல..., என்னாளுமே மஹா சிவராத்திரியாக இருக்க வேண்டுமா?!  ரொம்ப சிம்பிள்.  25 வருடங்களுக்கு முன்பே பரமக்குடி பகலவன், ஒலகப் புரவலன், ஒரு ஹீரோ என்றால் எப்படி வழிபாடு செய்ய வேண்டும், எப்படி அல்பசினோ, சார்லிசாப்ளின் போல நடிக்க வேண்டும், எப்படி ஜட்டி போட வேண்டும் உள்ளிட்ட பலவற்றையும்... 
"இது தான்டா சிவ ராத்திரி..." என தனக்கே உரிய பாணியில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு உணர்த்திய நாயகனின் செய்முறை விளக்கம் கீழே வீடியோவில்...
 

பின்குறிப்பு:  என்னதான் லிங்கா ரஜினி படமா இருந்தாலும் தெறம காட்டினது என்னமோ கமல் தான்...

இப்பாடல் குறித்து பலரும் அறிந்திராத ஓர் தகவல்:
"மைக்கேல் மதன காமராஜன்' படத்தி்ல கமல், ரூபினி, மனோரமா பங்குபெறும் ஒரு பாடல் காட்சியை எடுத்தார்கள். அப்பாடல் படமாக்கப் பட்ட பிறகு மனோரமா கமலிடம், "அது நல்லாயில்லையேப்பா.. ரொம்ப வல்கரா இருக்கே..., நானும்கூட நடிச்சிருக்கனே.. என்னையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு..." என்று சொன்னவுடன் மறுபடியும் அந்த பாடல் காட்சியை, வேறு ஒரு பாடலுடன் வேறு மாதிரி ஷூட் செய்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக எடுத்த வெர்ஷன் "சிவ ராத்திரி.." பாடல்
முதலாவதாக எடுத்த வெர்ஷன் "மத்தாப் பூவு, ஒரு பெண்ணாய் ஆகாதா..." என்ற பாடல்.  முதலில் வந்த ஆடியோ கேசட்டுகளில் இந்தப் பாடல் இருக்கும். சிவராத்திரியை விட மத்தாப்பூவு இன்னும் அருமையாக இருக்கும் கேட்பதற்கு... அப்பாடல் இதோ...


அனைவருக்கும் மகா சிவ ராத்திரி நல்வாழ்த்துக்கள்...!!!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:  இந்த வருசம் மகா சிவ ராத்திரி உற்சவத்தில் கலக்கப் போவதோ ஜெயிக்கப் போவதோ யாரு?  ஜக்கி வாசு தேவா, ரவி சங்கரா?!

Friday 4 March 2016

அழுக்கு ஜட்டிகளும் அரசாங்க விசாரணைகளும்

லட்சக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் மற்றும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளுக்கு இடையில், தனது அயராத நீதி வழங்கும் பணிகளுக்கு மத்தியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த நீதியரசர், ஜட்டி துவைக்காமல் போன தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்...
குறிப்பாணையாம்...!!
அதுவும் பச்ச இங்க்ல கையெழுத்துப் போட்டு சும்மா பளபளன்னு....!!


அதிகாரி மற்றும் அவர் "துணைவியாரை" எதிர்த்துப் பேசியதால் (நோட் திஸ் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) கூடிய விரைவில் விசாரணக் கமிஷனோ, நடுவர் மன்றமோ, CBI-யோ, RAW-வோ, இவ் விசாரணையை எடுத்து நடத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் திட்டவட்டமா தெரியுது.  ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கப் படலாம் என்பதால் முப்படை தளபதிகளின் தலையீடும் இருக்கும் போல் தெரிகிறது.

அவுத்துப் போட்ட ஜட்டியைத் துவைக்காமல் வன்முறையில் ஈடுபட்டு அதிகாரியையும் அவர்தம் "துணைவியாரை"யும் தரக் குறைவாக, கீழ்த்தரமாக, மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் எதிர்த்துப் பேசிய அந்த பயங்கரவாத, தீவிரவாத, தேசத்துரோக பெண்ணின் விளக்கம் கீழே...


இந்தியா வல்லரசு ஆகிடுச்சுடோய்...!!!